
இருபது வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு  பின்னர் பிணை வழங்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸநாயகத்துக்கு  ஜனாதிபதி நேற்று பொதுமன்னிப்பு வழங்கினார்.
சர்வதேச ஊடக சுதந்திர தினமான  நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்  படுத்தி ஜே.எஸ்.திஸநாயகத்திற்கு பொது மன்னிப்பை வழங்கியுள்ளார் என்று வெளி  விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரி வித்தார்.           "இதன் மூலம்  ஜனாதிபதி பேச்சளவில் மாத்திரமல்ல, செயலிலும் ஊடக சுதந்திரத்தை  உறுதிப்படுத்தி உள்ளார். சர்வதேச அளவில் இலங்கை குறித்த கருத்துகள்  மாற்றமடைவதற்கு இது வழிவகுக்கும்'' என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
"நோர்த்  ஈஸ்டர்ன் ஹெரால்ட்' என்ற சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் "சண்டே  ரைம்ஸ்' வார இதழின் கட்டுரையாளராகவும் விளங்கிய திஸநாயகம் 2008ஆம் ஆண்டு  மார்ச் மாதம் கைதுசெய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியைப்  பெற்றுக்கொண்டு இன வன்முறையைத் தூண்டும் விதத்தில் எழுதினார் எனக் குற்றம்  சாட்டப்பட்ட திஸநாயகத்துக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் 20 வருட சிறைத்தண்டனை  வழங்கியிருந்தது.
எனினும் இவர் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் பிணையில்  விடுவிக்கப்பட்டார்.
திஸநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 வருட  சிறைத்தண்டனைக்கு சர்வதேச ரீதியில் கடும் எதிர்ப்பு வெளியானதும்  குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment