Monday, May 3, 2010

திட்டங்கள் குறித்து அரசு எங்களுடன் ஆலோசனை நடத்தினால்... வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு கூட்டமைப்பு முழு ஆதரவு நல்கும்




வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து அந்தப் பிரதேச மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எம்முடன் அரசாங்கம் திறந்த மனதுடன் பேசினால் கலந்தாலோசனை நடத்தினால் நாம் எமது முழு ஆதரவையும் வழங்குவோம்.
பொதுத் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர் களு ம் இந்தியத் தூதுவர் அசோக்கே காந்தவின் அழைப்பின் பேரில் அவரை நேற்று நண்பகல் சந்தித்தனர்.
அப்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு இந்தியத் தூதுவரிடம் உறுதியாகத் தெரிவித்தனர்.

நட்புரீதியாக இடம்பெற்ற இச்சந்திப் பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம் பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்ட முக் கிய விடயங்கள் வருமாறு:
* வன்னி மாவட்டத்தில் மக்களின் மீள் குடியமர்வு முழுமையாக நிறைவேற்றப் படவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
* முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தமது சொந்த இடங் களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.
* கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாகக் கூறி மீள்குடியமர்வை தாமதப்படுத் திக் கொண்டு போகக்கூடாது.
அரசு எங்களுடன் பேசினால்
திறந்த மனத்துடன் ஆதரவு
* நாங்கள் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அந்த வகை யில் அந்த மக்களின் மீள்குடியமர்வு மற் றும் அபிவிருத்திப் பணிகளில் நாமும் பங்க ளிக்கவேண்டும். இது தொடர்பாக அரசு எங்களுடன் பேசவேண்டும். திறந்த மனது டன் அவர்களுக்கு ஆதரவு வழங்க ஒத்து ழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
* யாழ்ப்பாணத்தில் இருபது வருடங் களாக நடைமுறையில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்களால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவேண்டும். இந்தப் பணியை துரிதமாக்கவேண்டியது அவசி யம். அத்துடன் வடக்கு கிழக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் யாவும் உடன் நீக்கப்படவேண்டும்.
* இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை கௌரவமான முறையில் மீள் குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட விடயங்கள் உட்பட பல் வேறு விடயங்களைத்தாம் முன்வைத்தாக கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கில் இந்தியா மேற் கொள்ளவுள்ள உதவிகள் குறித்து தூதுவர் கூட்டமைப்புக் குழுவிடம் தெரிவித்தவை வருமாறு:
* மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங் களுக்கான ரயில் பாதைகளைப் புனர மைக்க உதவி.
* தூத்துக்குடி, தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்தல்.
* காங்கேசன்துறை துறைமுகத்ததை புனரமைக்க உதவி.
* முல்லைத்தீவு மாவட்டத்தில் பாட சாலைகளை திருத்தி அமைப்பதுடன் உப கரணங்களையும் வழங்குவோம்.
* கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலை களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

No comments:

Post a Comment